சென்னை விமான நிலையத்திலிருந்து 13 சர்வதேச விமானங்கள் உள்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் சரியான நேரத்திற்கு வருவதாகவும், கனமழை காரணமாக பயணிகளின் உடைமைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை விமானத்தில் ஏற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்து 13 சர்வதேச விமானங்கள் 30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரையிலும், 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக புறப்படுகிறது என்று கூறினர்.