Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. அரசு வேலை…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் மற்றும் கல்வி பயிற்றுநராக காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் மூலமாக இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களை நேரடி நியமனத்திற்கு பணிக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்த ஆணையிட்டுள்ளதால் உச்சவரம்பை சார்ந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்வு ஆணையம் கூறியுள்ளது. விண்ணப்பிக்கும் தேர்வர்கள் உரிய திருத்தங்களை செய்து கொள்ளலாம் என தெரிவித்தது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில்,கனமழை காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

Categories

Tech |