தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடாது மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகள், சாலைகள் மற்றும் கடைகளுக்குள் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.இதனால் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மலையாள அதிகம் பாதிக்கப்பட்ட திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்…