கனடாவில் நள்ளிரவில் மாயமான பெண்ணொருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
கனடாவில் ரொரண்ரோவை சேர்ந்த 23 வயதான பிரிட்டானியா போல்ட் என்பவர் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் ஜேன் தெருவில் கடைசியாக காணப்பட்டு பிறகு காணாமல் போயுள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக போலீசார் அவர் காணாமல் போன அன்றைக்கு அணிந்திருந்த உடைகள் மற்றும் அவரின் உயரம் பற்றி தகவல் வெளியிட்டது.
மேலும் பொது மக்களின் உதவியையும் போலீசார் நாடினர். அதற்கு பிறகு பத்திரமாக போல்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.