Categories
உலக செய்திகள்

கனடாவில் 22 வயதுடைய இளைஞர்…வாகன விபத்தில் உயிரிழப்பு …போலீஸ் விசாரணை …!!!

கனடாவில்  இருசக்கர வாகனத்தில் சென்ற 22 வயதுடைய இளைஞர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.

கனடாவில் நோவா ஸ்கோட்டியா பகுதியில் யர்மவுத் கவுண்டில் என்ற இடத்தில்தான் இந்த விபத்து நடந்துள்ளது . இந்த விபத்தானது ,கடந்த  இரு தினங்களுக்கு முன், காலை நேரத்தில் சுமார் 6 .20 மணியளவில் நடந்தது. இந்த  22 வயது உடைய வாலிபர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திடீரென்று வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதனால் நிலை தடுமாறி அந்த வாலிபர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது .

ஆனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் மற்ற எந்த ஒரு வாகனமும் தெரியவில்லை. இந்த விபத்தை பற்றி ,அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ,அந்த இளைஞரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலத்த காயங்களால் அடிபட்ட ,அந்த வாலிபர்  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |