பிரிட்டிஷ் நாட்டின் விக்டோரியாவில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் பாதிரியார் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென பாதிரியாரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. வீடு மரத்தாலானது என்பதனால் மளமளவென தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து பாதிரியாரின் மனைவி ஏதோ சத்தம் கேட்டதை உணர்ந்து படுக்கைக்கு வெளியே வந்து பார்த்துள்ளார் அப்போது வீடு பற்றி எரிவது கண்டு அதிர்ச்சியடைந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் மேல் மாடியில் இருந்த ஜன்னல் வழியாக பாதிரியார் மற்றும் அவருடைய பிள்ளைகள் மூவரும் குதித்துள்ளனர். இதில் பாதிரியாரின் 11 வயதாகும் மூத்த மகளுக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சரியான நேரத்தில் தீயணைப்பு துறையினர் வந்ததால் ஏணி மூலம் அவர்களை வீட்டிலிருந்து மீட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிரியார் கூறுகையில், பிள்ளைகளுடன் வசிக்கும் குடும்பத்தினரை உறங்கும் நேரத்தில் தீயிட்டுக் கொளுத்தும் அளவிற்கு யார் துணிந்து இருப்பார்கள் என தெரியவில்லை என கூறியுள்ளார் அருகிலிருந்த தேவாலயத்திற்கு எந்த ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..