Categories
உலக செய்திகள்

கனடாவில் பெண்ணை கடத்திச் சென்ற இளைஞர்… விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்…!!!

கனடாவில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவில் ரொரன்ரோவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சந்தோஷ்குமார் செல்வராஜா (34) என்ற நபர் Empringham Dr + Sewells Rd பகுதியில் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை காரில் கடத்தி சென்றிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிவிட்டோம். காயமடைந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்குமார் செல்வராஜாவை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம். கடத்தல், ஆபத்தான வன்முறை உள்ளிட்ட வழக்குகள் அவர்மீது போடப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளனர்.

அதன் பிறகு காவல் துறையினர் கூறுகையில், ‘சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ் குமாரை கைது செய்துவிட்டோம். இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |