கனடாவை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஹலிபக்சில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.10 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று விலகி அருகில் இருந்த சிமெண்ட் தடுப்பு மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுனரான 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.