Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கந்த சஷ்டி திருவிழா…. சுவாமி ஜெயந்திநாதருக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப திபாராதனையும் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை அடுத்து காலையில் சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனை அடுத்து ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முருக பெருமானும் வள்ளி தெய்வானையும் வெள்ளி சக்கரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தந்தனர். இதனை அடுத்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை அம்மையாருடன் மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். அங்கு சுவாமிக்கும் அம்பாள் மஞ்சள் பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்பாள்களும் தங்கச்சப்ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இந்த ஏற்பாடுகளை கோவிலின் அறங்காவலர்களும் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories

Tech |