பாலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேல் வீரர்களை கத்தியால் தாக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் நாட்டை ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையில் மோதல் மற்றும் வன்முறை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் நாட்டின் வீரர்களை பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்த முயன்றார்.
அந்தப் பெண்ணிற்கு வயது 30 ஆகும். அந்த பெண் கத்தியுடன் தங்களை நோக்கி வருவதை பார்த்த இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டு வீழ்த்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.