Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியால் குத்த முயன்ற வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக விதிமுறைகளை மீறி வந்ததாக கூறி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்துவிட்டனர்.

இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் தர்மராஜனை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்தது காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்த சமயத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தர்மராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷ் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |