சென்னையை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஆத்தூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் இறங்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது, விபத்துகளை தவிர்க்கும் விதமாக மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும்போது சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதாமல் இருப்பதற்காக சிவப்பு நிற விளக்குகள் பொருத்தபட்டுள்ளது.
மேலும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதி மிகவும் வளைவான பகுதி என்ற காரணத்தினால் தடுப்பு சுவரில் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்படுவதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அதனை பார்த்து கவனமாக வாகனத்தை இயக்கி செல்வார்கள். அதனால் விபத்துகளை தவிர்க்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.