தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. ஆனால் விஜய் சேதுபதி கதையை பொருட்படுத்தாமல் அனைத்து படங்களுக்கும் ஓகே சொல்லி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் மற்ற மொழியில் விஜய்சேதுபதிக்கு பட வாய்ப்பு வந்தால் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் இவர் வாங்குவதாக கூறப்படுகிறது. கதையை பொருட்படுத்தாமல் இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிப்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.