நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் “மக்கள் செல்வி பட்டம்” வழங்கியது பற்றி வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் செல்வி என கீர்த்தி சுரேஷை, அழைப்பது குறித்து விசாரித்தபோது யாரும் யாருக்கும் அப்படத்தை வழங்கவில்லை என தெரிந்து கொண்டேன். என் திரையுலக வாழ்க்கையைத் தவிர சமூக சேவையில் ஈடுபட்டு பலருக்கு உதவி செய்து வருவதால் பல்வேறு அமைப்பினர் இணைந்து எனக்கு “மக்கள் செல்வி” என்ற பட்டத்தை வழங்கினர். திரையுலகில் என்னை கதாநாயகி என்று அழைப்பதை விட கதையின் நாயகி என அழைப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறினார்.