வீட்டின் கதவை பூட்ட வெளியே சென்ற இளம்பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகரில் விஜி என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சுகன்யா வீட்டின் முன்பக்க கதவை பூட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துண்டால் சுகன்யாவின் தலையை மூடி அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து சுகன்யா உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைப்பதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.