வியாபாரியின் வீட்டில் தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் அதிகாலை நேரத்தில் வீட்டை பூட்டாமல் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த பெட்டி திறந்து கிடந்ததை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, 23 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து லட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.