வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை தர்மலிங்கம் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் இருந்த சாரை பாம்பை பிடித்தனர். இதனை அடுத்து அந்த பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது.