சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் கட்டிட தொழிலாளியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் அரவிந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.