Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கதறவிடும் காய்கறி விலை….. கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்…. ஒரு கிலோ கேரட் எவ்ளோ தெரியுமா?…!!!!

ஈரோடு வ உ சி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலம் வந்துவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் காய்கறிகளின் விலை விண்ணை முட்ட ஆரம்பிக்கும். அந்த வகையில் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள வ உ சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

ஆனால் தென்மேற்கு பருவமழை தீவிரமானதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட்டுக்கு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கிலோவிற்கு 5 முதல் 35 வரை உயர்ந்துள்ளது.

அதன்படி காய்கறிகளின் விலை நிலவரம் இதோ:

* கத்தரிக்காய்- 50 ரூபாய்
* வெண்டைக்காய்- 40 ரூபாய்,
* கேரட்- 90 ரூபாய்
* பீன்ஸ்- 80 ரூபாய்,
* முள்ளங்கி- 25 ரூபாய்,
* பீட்ரூட்- 60 ரூபாய்,
* உருளைக்கிழங்கு- 40 ரூபாய்,
* சொரக்காய்- 15 ரூபாய்,
* முட்டைக்கோஸ்- 40 ரூபாய்,
* மொரக்காய்- 30 ரூபாய்,
* கொத்தவரங்காய்- 30 ரூபாய்,

* பட்டா அவரை- 50 ரூபாய்,
* கருப்பு அவரை- 70 ரூபாய்,
* காலி பிளவர்- 40 ரூபாய்,
* பீர்க்கங்காய்- 40 ரூபாய்,
* பாவைக்காய்- 40 ரூபாய்,
* புடலங்காய்- 40 ரூபாய்,

* தக்காளி- 10 முதல் 15 ரூபாய்,
* முருங்கைக்காய்- 40 ரூபாய்,
* பச்சை மிளகாய்- 60 ரூபாய்,
* இஞ்சி- 60 ரூபாய்,
* சின்ன வெங்காயம்- 35 முதல் 40 ரூபாய்,
* பெரிய வெங்காயம்- 25 முதல் 30 ரூபாய்

Categories

Tech |