Categories
பல்சுவை

கண்ணைக் கவரும் பட்டாம்பூச்சிகள்…. வாழ்க்கை சுழற்சி பற்றி தெரியுமா?…. இதோ சுவாரஸ்ய தகவல்….!!!!

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப்பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனம். இந்தப் பூச்சிகள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி பருகுவதும் இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பது பலரையும் கண்டு களித்து இன்புற செய்யும். பட்டாம் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி நான்கு நிலைகளில் நடைபெறும். முதலில் முட்டையிலிருந்து குடும்ப நிலைக்கு குழுவாக அல்லது மயிர்கொட்டி ஆக உருமாறி பின்னர் கூட்டுப்புழு எனப்படும் முழங்கு நிலைக்குப் போகும். அதன் பிறகு பல நாட்கள் கழித்து பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறும். பட்டாம்பூச்சிகளின் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகையான பல்வேறு உயிரினங்கள் உள்ளது.

இவற்றில் மிகப் பெரிதான பட்டாம்பூச்சி பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்சாண்டிரா என்பதாகும். பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிக பலவும் வெப்பமண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும் சில குளிர் மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும், கனடாவின் படம் மூளைக்கு அழுக்கான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலை நிலங்களிலும் கூட வாழ்கின்றன. பட்டாம்பூச்சியின் முட்டைகள் பழ அளவிலும் வடிவிலும் நிறத்திலும் காணப்படும்.

அதில் சில நம் கண்ணுக்கே தெரியாது. அந்த முட்டைகள் பல மாதங்கள் அப்படியே இருந்து அதிலிருந்து வெளிவரும் புழு தன் உணவைத் தானேதான் தேர்ந்து உண்ணவேண்டும். அந்தப் புழு தனது நிலை காண முழு வளர்ச்சி அடைந்த பிறகு அடுத்த நிலையாகிய கூட்டுப்புழு நிலைக்கு தயாராகும். அது தன்னைத்தானே சுற்றி ஒரு கூடு கட்டிக் கொள்ளும். பின்னர் கூட்டுக்குள் முழு வளர்ச்சி அடைந்த பிறகு பட்டாம்பூச்சி ஆனது இருந்து காலால் உந்தி கூட்டிலிருந்து வெளிப்படுகிறது. அப்படி கூட்டிலிருந்து வெளியே வர சில நிமிடங்களே ஆகும். கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் ஈரமாக இருக்கும்.

வெளி வந்தவுடன் பட்டாம்பூச்சி ஆனது தன்னுடைய உடல் தசையை இறுக்கி காற்றையும் ரத்தத்தையும் அமுக்கி தன் உடலெங்கும் செலுத்துகிறது. கூட்டிலிருந்து வெளியே வந்த பட்டாம் பூச்சி் ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் இறக்கையை மேலும் கீழுமாய் அடித்து பறக்க தயாராகிறது. இப்படி முழு வளர்ச்சி அடைந்த பட்டாம்பூச்சி ஓரிரு கிழமைகள் தான் அதாவது வாரங்கள் தான் உயிர் வாழும். ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு வரையும் உயிர்வாழ்கின்றன.

Categories

Tech |