இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் யூடியூபில் பதிவிட்ட வீடியோ பற்றி மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஏசி, தற்போது “யார் இந்த எஸ்.ஏ.சி”என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த சேனலில் முதல் எபிசோடாக “பிளாட்பார்மில் எஸ்ஏசி” என்ற வீடியோவை அண்மையில் பதிவிட்டுள்ளார்.வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
கண்ணுல தண்ணீர் வருது சார்… ஒரு உச்ச நட்சத்திரத்தை உருவாக்கிய அப்பாவா இப்படி நெகிழ வைக்கிறார் என்பது ஆச்சர்யத்திற்குரியது.
இளைஞரே, என்றும் உங்கள் முயற்சிகள் எங்களுக்கு முன் படிக்கட்டுகள்❤https://t.co/RjBBQN5y76@Dir_SAC pic.twitter.com/QnItq7avNN
— sureshkamatchi (@sureshkamatchi) March 6, 2022
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சி பகிர்ந்த வீடியோ பற்றி தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “கண்ணுல தண்ணிர் வருது சார்… ஒரு உச்ச நட்சத்திரத்தை உருவாக்கிய அப்பாவா இப்படி நெகிழ வைக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியது. இளைஞரே… என்றும் உங்கள் முயற்சிகள் எங்களுக்கு முன் படிக்கட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.