Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய முதியவர்… மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போலீஸ் அதிகாரி… அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!!

திண்டுக்கல்லில் இரவு நேர ஊரடங்கால் உணவு எதுவும் கிடைக்காமல் பசியில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த முதியவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உணவளித்து உதவிய சம்பவம் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் கடைகள், ஓட்டல் என அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் இரவு நேரத்தில் யாரேனும் வெளியே சுற்றித்திரிகிறார்களா ? என்று கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் தெற்கு காவல்துறை துணை ஆய்வாளர் ஜான்சன் தலைமையிலான காவல்துறையினர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு முதியவர் ஒருவர் கண்ணீருடன் நாகல் நகர் ரவுண்டானா அருகே சாலையோரத்தில் அமர்ந்திருப்பதை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் அங்கு சென்று முதியவரிடம் விசாரித்தார். அப்போது அந்த முதியவர் உணவு வாங்குவதற்கு காலதாமதமாகி விட்டதாக கூறியுள்ளார். மேலும் அதற்குள் ஹோட்டல்களும் அடைக்கப்பட்டு விட்டதால் உணவு எதுவும் இல்லாமல் பசியால் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உணவை அந்த முதியவருக்கு எடுத்து கொடுத்து சாப்பிட வைத்தார். ஒரு காவல்துறை அதிகாரியின் இந்த செயல் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |