Categories
சினிமா தமிழ் சினிமா

கண்டிஷன் போட்ட கவுண்டமணி…. ஓகே சொன்ன சிவா…. வெளியான மாஸ் அப்டேட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் காமெடி நடிகர் ஒருவர் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக உக்ரைன் அழகி மரியா நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவா மாவீரன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் தற்போது பிரபலகாமெடி  நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் கவுண்டமணியின் சில கண்டிஷங்களுக்கு சிவா தரப்பில் இருந்து சம்மதம் கூறியதால் தற்போது படத்தில் கவுண்டமணி நடிப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |