Categories
மாநில செய்திகள்

கண்களில் கண்ணீர் வராமல் அதிகாரிகள் பார்க்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது….. முதல்வர் ஸ்டாலின்..!!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் பயன் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறையை எனது தனிக்கவனத்தில் வைத்திருக்கிறேன். அனைத்து துறைகளின் முன்னேற்றம் என்பதை நோக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற வேண்டும் என்பதில் கலைஞரைப் போல் நானும் மிகுந்த சிரத்தையுடன் இருக்கிறேன். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் யாரையும் சார்ந்து இருக்கா வண்ணம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் காவலனான கலைஞர் வழியில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மாற்றுத்திறனாளியின் கண்களில் கூட கண்ணீர் வந்து விடக்கூடாது என்று எண்ணி அதிகாரிகள் செயல்பட வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட இடம் சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்..

Categories

Tech |