பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நேற்று ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் செப்டம்பர் 16ஆம் தேதி வெடிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர், உடனே போலீசில் தகவல் அளித்த நிலையில், பள்ளிக்கு விளைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது . அதன் பிறகு மெசேஜ் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த மொபைல் எண் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை உடையது என தெரியவந்தது. அதன் பிறகு அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரின் மகன் செப்டம்பர் 16ஆம் தேதி நடக்க உள்ள கணித தேர்விற்கு பயந்து அதை ரத்து செய்யும் நோக்கத்துடன் இந்த மெசேஜை அனுப்பியது தெரியவந்துள்ளது.