கனடாவில் தனது கணவரை நாய் போல பெண் ஒருவர் வாக்கிங் அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கனடாவின் கியூப் நகரில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் மட்டும் வாக்கிங் செல்ல அனுமதி உண்டு.
இந்நிலையில் பெண் ஒருவர் தனது கணவரை நாய்போல வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், வெளியே செல்வதற்கு காரணம் வேண்டும் என்பதால் இப்படி செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் தன் கணவரை நாய் போல வாக்கிங் அழைத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.