விபத்தில் இறந்த தனியார் நிறுவன பாதுகாவலரின் குடும்பத்திற்கு 6 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஏழுமலை என்பவர் பாதுகாவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏழுமலை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து ஏழுமலையின் மனைவி புஷ்பா 15 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னையில் இருக்கும் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை விபத்து நடந்த தேதியிலிருந்து ஆண்டுக்கு 7 1/2 சதவீதம் வட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.