பிரபல நடிகை காதலர் தினத்தை முன்னிட்டு கணவருடன் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு நடனமாடி பிரபலமானவர் சுஜாவருணி. இவர் துணை நடிகையாகவும் நடித்து வருகின்றார். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்றிருந்தார். இதன் வாயிலாக ரசிகர்களிடையே பிரபலமான சுஜாவாருணி. தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் 2019ஆம் வருடம் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் சிவாஜியின் முதல்மகன் ராம்குமாரின் மகனான சிவாஜி தேவ்வை காதலித்து மணந்து கொண்டார். சுஜாவாருணியை விட சிவாஜி தேவ் ஐந்து வயது சிறியவர். சுஜா வருணி பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு தன் கணவருடன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற குத்துப்பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.