பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பையாறு மூலக்காடு பகுதியில் வசித்து வருபவர் மெக்கானிக்யான பாக்கியராஜ். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்ராம்பாளையத்தில் வசித்து வந்த 24 வயதுடைய வசந்தி என்பவருக்கும் கடந்த 2015 -ஆம் வருடம் திருமணம் நடந்தது . இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். மேச்சேரி அருகில் பொட்டனேரி நால்ரோடு பகுதியில் பாக்யராஜ் தங்கி வேலை பார்த்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வசந்தி சம்பவத்தன்று மேச்சேரிக்கு வந்து அங்குள்ள ஒரு கடையில் விஷம் வாங்கி குடித்துள்ளார். அதன்பின் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மேச்சேரி குலாளர் தெருவில் வைத்து வசந்தி மயங்கிக் கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வசந்தி பரிதாபமாக உயிரழந்தார். இதுகுறித்து மேச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி ஏழு வருடங்களே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.