Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல் செய்த காரியம்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டகம் மேலன்விளை பகுதியில் கொத்தனாரான பிரேம்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சபிதா கணவருக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாலி சங்கிலி அவரது தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரேம்குமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சபிதாவும், உறவினர்களும் பிரேம்குமாரை தேடி அலைந்தனர். அப்போது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில் பிரேம்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து சபிதா கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு கடந்து சென்று பிரேம்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |