ஒடிசா மாநிலத்திலுள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். சென்ற வருடம் சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. எனினும் பஹிர் தன் காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் பஹிரின் காதலை அவரது மனைவி கண்டறிந்தார்.
இது தொடர்பாக தன் கணவருடன் மனைவி பேசினார். இதையடுத்து அவர்களின் காதலை பஹிரின் மனைவி அங்கீகரித்தார். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி பஹிர் மனைவி அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். உடனே இருவரும் ஒத்துக் கொண்டனர்.
அதன்பின் இருவரும் திருநங்கைகள் புடைசூழ கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது தொடர்பாக கூறியதாவது “இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளது. இதனால் இது அபூர்வமான திருமணமாகும். இந்த திருமணம் பற்றி மறு பரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக் கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்துவைத்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.