Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு “கரண்ட் ஷாக்”…… காதலனுக்கு போன் கால்….. ரெக்கார்டிங்க்கில் சிக்கி கொண்ட சம்பவம்….!!!!

கணவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்துவிட்டு காதலுனுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஷேல்கேதா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்வேந்திரா. அவருக்கு மார்ச் 26ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் ஏப்.9ஆம் தேதி அவர் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டதாக, அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் செப்.3 அன்று மன்வேந்திராவின் செல்போனை அவரது மருமகன் மனே பயன்படுத்திய போது ஓர் அதிர்ச்சிகரமான கால் ரெக்கார்டிங் சிக்கியுள்ளது.

அதில் மன்வேந்திராவின் மனைவி அடையாளம் தெரியாத நம்பரை தொடர்பு கொண்டு ‘நீ கூறியபடியே 10 நிமிடம் மன்வேந்திராவிற்கு கரண்ட் ஷாக் கொடுத்துவிட்டேன். நிச்சயம் செத்துருவான..? என்று கேட்க, அதற்கு ‘கண்டிப்பாக செத்திருவான்’ என்று மறுப்புறம் ஓர் ஆண்குரல் கேட்டுள்ளது. உடனே அந்த ரெக்கார்டிங்கை மனே போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மன்வேந்திராவின் மனைவியும், அந்த நம்பரை வைத்திருந்த அதேந்திரா என்பரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும், அதற்கு மன்வேந்திரா தடையாக இருந்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |