சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் தந்தை உடல் நல குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய 42 வயது நண்பரான அபுதாகிர் என்பவருக்கும் சிறுமிகளின் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபுதாகிர் சிறுமிகளின் வீட்டில் தங்க தொடங்கினார்.
இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அபுதாகிர் இரண்டு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமிகளின் தாய் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அபுதாகீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.