எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று மாதம் ஆண் குழந்தையுடன் துபாயில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்றும் வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன் கணவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாக தன்னுடைய 3 மாத குழந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் டிவி ரிமோட்டால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். தன் கணவன் மீது இருந்த கோபத்தின் காரணமாக தான் பெற்றெடுத்த குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தாய் செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.