Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன் மனைவி சண்டை…. விஷம் குடித்து மனைவி சாவு…. விழுப்புரத்தில் சோகம்…!!

கணவன் மனைவி சண்டையில் விரக்தியடைந்த மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியிலுள்ள குடுமி குடிசை கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ஏழுமலை(51)-சாந்தி(46). ஏழுமலை தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சாந்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சாந்தி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏழுமலை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |