Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல திட்டம்… “ஸ்கேன் ரிப்போர்ட்” ஆல் சிக்கிய பெண்…. டாக்டரின் பரபரப்பு புகார்….!!!

போலியான ஸ்கேன் ரிப்போர்ட்டை உருவாக்கிய பெண் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தேனியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் பெண் அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து கள்ளக்காதலுக்காக அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் கணவர் மூலம் பிரச்சனையை உருவாக்கி பிரிந்து செல்ல வேண்டும் என நினைத்து அந்த பெண் திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாகி பரிசோதனைக்காக எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துள்ளார்.

இதனை அடுத்து போட்டோ ஷாப் மூலம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தது போல கர்ப்ப காலத்தை அந்த ரிப்போர்ட்டில் திருத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலியாக திருத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை பெண் கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த ரிப்போர்ட்டை தனது கணவருக்கு அனுப்புமாறு அந்த பெண் கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். மாறாக கள்ளக்காதலன் போலியான ரிப்போர்ட்டை பெண்ணின் கணவருக்கு அனுப்புவதற்கு பதிலாக ரிப்போர்ட்டில் இருந்த டாக்டரின் செல்போன் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து தனது பெயரில் இருக்கும் ரிப்போர்ட்டை திருத்தியதை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணையும், கள்ளக்காதலனையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தவறுதலாக அனுப்பியதாக கூறி இருவரும் மன்னிப்பு கேட்டனர். பின்னர் போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |