Categories
தேசிய செய்திகள்

கணவனை தோளில் சுமந்த மனைவி… குச்சியால் தாக்கிய கிராமத்தினர்… அதிர்ச்சி வீடியோ..!!

பணிபுரியும் இடத்தில் வேறு ஒரு ஆணுடன் பேசிய பெண்ணை கணவரை தோளில் சுமக்க செய்து கிராம மக்கள் குச்சியால் அடித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதிகள் தங்கள் வேலையை முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது அந்த கணவன் தனது மனைவி வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவருடன் நட்பில் இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக தனது குடும்பத்தினரிடமும் கிராம மக்களிடமும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் அந்த பெண்ணுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி அந்தப் பெண்ணை அவரது கணவரை தோளில் சுமந்து நடக்க வைத்ததோடு அவரை கம்பால் அடித்து கொடுமை படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் பெண்ணொருவர் தனது கணவனை தோளில் சுமந்து செல்கிறார். சிறிது தூரம் சென்றதும் பாரம் தாங்காமல் நிலை தடுமாறி நிற்கும் அந்தப் பெண்ணை கிராம மக்கள் கடுமையாக தாக்குகின்றனர். யாரும் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை ஆனால் பலரும் அப்பெண் வேதனைப்படும் காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், அப்பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Categories

Tech |