கனடாவில் வீட்டு பிரச்சினை காரணமாக காவல்துறையினரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள Kate என்ற இளம்பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினைக்காக காவல்துறை அதிகாரியை அழைத்திருக்கிறார். விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி Const. Brian Burkett அந்தப் பெண்ணிடமிருந்து மொபைல் எண்ணையும் அவரது புகைப்படங்களையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும், ஆபாச படங்களை கேட்டும் துன்புறுத்தியுள்ளார். Kate ஏற்கனவே மனரீதியான வேதனையில் இருந்ததால் மகளிர் அமைப்பிடம் உதவி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடிரென அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வீட்டில் ஓய்வில் இருக்கும்போது ஆயுதங்களுடன் நுழைந்த காவல்துறை அதிகாரிகள் அவரை வாகனத்தில் தூக்கி போட்டுக்கொண்டு மருத்துவமனை அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் kate அங்கு இருக்கும் தகவலை யாருக்கும் தெரியாமல் மறைத்திருக்கின்றனர். அப்போதுதான் Kateக்கு தாம் அளித்த புகாரின் காரணமாக தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது என புரிய வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் சென்றும் Const. Brian Burkett மீதான குற்றங்களை நிரூபிக்க இயலவில்லை. இதனிடையே Const. Brian Burkett மீது மற்றொரு நான்கு பெண்களும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இனிதான் இந்த பிரச்சனையில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.