ஈரானில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய மனைவியின் கழுத்தை அறுத்து தனது கையில் வைத்துக்கொண்டு நடுரோட்டில் சிரித்தப்படியே சென்ற இளைஞரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
ஈரானில் mona என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் துருக்கி நாட்டிற்கு ஈரானிலிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார்கள் mona வை மீண்டும் ஈரானுக்கு அழைத்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் அவருடைய கணவர் தனக்கு தெரியாமலேயே வெளிநாட்டிற்கு தப்பி சென்ற மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். அதன்பின்பு நடுரோட்டில் சிரித்துக்கொண்டே ஒரு கையில் தலையுடனும் மற்றொரு கையில் கத்தியுடன் அந்த நபர் வலம் வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.