சிபிஎஸ்சி பாடங்களில் மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கணவனின் பேச்சைக் கேட்டால் தான் உங்கள் குழந்தைகளின் கீழ்ப்படிதலை பெறமுடியும். பெண் விடுதலை குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிடுகிறது என கூறப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தனர். மேலும் இது போன்ற கருத்துக்கள் பிற்போக்குத் தனத்தை ஊக்குவிப்பதாகவும் பாலின பாகுபாடுகளை அதிகரிப்பதாகவும் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், தன்னால் நம்பவே முடியவில்லை எனவும் இது போன்ற அபத்தமான கருத்துக்களையும் பிற்போக்கு சிந்தனைகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம் என வினவி இருந்தார். இது போன்ற கருத்துக்கள் எதற்காக பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் கேள்வி எழுப்பியிருந்தார். ஏற்கனவே குஜராத் கலவரம் குறித்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு சமூகவியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி விதிமுறைகளுக்கு எதிரானது என சிபிஎஸ்இ நிர்வாகம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.