Categories
தேசிய செய்திகள்

கட்டு கட்டாக பணம்!…. அரசு பொறியாளர் வீட்டில் ரெய்டு… பீகாரில் பரபரப்பு….!!!!!

இயந்திரங்களே திணறும் அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பீகார் அரசுப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மேஜை முழுவதும் கட்டுக் கட்டாக பணம் நிறைந்துகிடக்க, அதை மிகவும் பொறுமையாக இயந்திரங்கள் வாயிலாக எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வளவு கட்டுக் கட்டாக பணமா..? எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறதோ? என்று மக்கள் திகைத்து போகிறார்கள். பீகார் அரசு பொறியாளர் சஞ்சய் ராய், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை அவரது வீட்டில்  சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் பெரியதாக பணம் எதுவும் சிக்காத நிலையில், இவரது இளம் பொறியாளர் மற்றும் காசாளரிடம் தான் பணத்தைக் கொடுத்து வைப்பதாக தகவல் கிடைத்தது. உடனே இவர்களது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கட்டு கட்டாக சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வெறும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் 1 கோடி மதிப்புள்ள தங்கநகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்  பணத்தை எண்ண  இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் எண்ணப்பட்டது. அத்துடன் தங்கநகைகளும் எடைபோட்டு மதிப்பிடும் பணிகளும் நடந்துள்ளது.

Categories

Tech |