கட்டுமான பொருள் வாங்கி ஐந்தரை கோடி மோசடி செய்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரிடம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கிம் ஜெஹியோங் என்பவர் தான் ஐயப்பன் தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்திற்காக 2018 ஆம் வருடம் 38 கோடியே 62 லட்சத்து 78 ஆயிரத்து 41 ரூபாய்க்கு கட்டுமான பொருட்களை வாங்கி இருக்கின்றார். அதில் 33 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 399 ரூபாயை நோக்கமாக செலுத்தியுள்ளார்.
மீதி தொகையான 5 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 92 கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் இது பற்றி தர்மலிங்கம் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் கமிஷனர் சந்திப்பாய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கிம் ஹெஜியோங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.