Categories
மாநில செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலை குறையுமா?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

கட்டுமான பொருட்கள் நியாயமான விலைகளில் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மேக்னைட்ம், தமிழ்நாடு கனிம நிறுவனம், சுரங்கம் மற்றும் புவியியல் ஆகியவற்றின் திட்ட பணிகள் மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர்  புவியியல் மற்றும் சுரங்கத் தொழில்களில் அரசுக்கு கூடுதல் லாபத்தை ஈட்டித் தரும் நோக்கில் அனைத்து அரசு ‌அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றார். இதனையடுத்து சட்டவிரோதமாக கனிம வளங்களைத் தோண்டி எடுப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் களப்பணியாளர்களுடன் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்ய‌ வேண்டும் எனவும் கூறினார். இதில் தவறிழைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தகுதி வாய்ந்த இடங்களில் கிரானைட் குவாரிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதை உடனடியாக பொதுஏலத்திற்கு விட்டு அரசுக்கு வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும். அதன்பிறகு மாவட்ட கனிம கூட்டமைப்பின் நிதியின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும். இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை கனிம வருவாய் 1,024 கோடியாக உள்ளது. இனி வரும் மாதங்களில் இதைவிடக் கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் கல்குவாரிகளை நியாயமான விலையுடன் ஏலத்திற்கு கொண்டு வரவேண்டும். இதனையடுத்து பொதுமக்களுக்கு கட்டுமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வேண்டுமெனவும் கூறினார்.

Categories

Tech |