திடீரென நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், இவருடைய மனைவி மகாலட்சுமி, மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் கிருஷ்ணா ஆகியோர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதேபோன்று கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வங்கி மேலாளர் ரமேஷ் மற்றும் வங்கியில் வேலைப் பார்க்கும் அருண் கார்த்திகேயன், திலீப் ஆகியோர் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை லட்சுமிபதிராஜ் என்பவர் ஓட்டினார். இந்த வாகனம் கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென நிலைத் தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கார்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.