Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… மரத்தின் மீது மோதியதால்… டிரைவர் பலி..!!+-

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

கேரளாவின், கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்டக்டரின் நிலைமை மோசமாக உள்ளது. விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |