தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில்களில் தரிசனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகஸ்ட் 10 முதல் செவ்வாய் கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.