Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளை மீறினால் தளர்வுகள் திரும்ப பெறப்படும்…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என கூறினார். போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என தெரிவித்தார்.

டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும் என்றும் கூறினார். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும் என்றும் காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் பேசியுள்ளார்.

Categories

Tech |