Categories
உலக செய்திகள்

“கட்டிலுக்கடியில் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை”…. திகிலூட்டும் வீடியோ….!!

ஒரு வீடியோவில் கட்டிலுக்கு அடியில் குழந்தை இழுத்து செல்வது போன்று காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒரு குழந்தை தனது படுக்கைக்கு அடியில் இழுத்து செல்வது போல் தோன்றும் ஒரு அமானுஷ்ய வீடியோ வைரலாகி வருகிறது. இது அனைவரையும் பயமுறுத்தும் வகையில் உள்ளது. அவரது தந்தை ஜோஸ் டீன் இதனை அமானுஷ்ய செயல்பாடு என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நள்ளிரவில் சிறுமி தனது பொம்மைகளுடன் விளையாடும்போது படுக்கையின் முடிவில் படுத்திருந்தார். படுக்கையிலிருந்து எழுந்த சிறுமி அம்மா என்று கூச்சலிட்டு, அதன் பின் கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து செல்கிறார்.

அப்போது அவரது அழும் குரல் கேட்கிறது. ​​சிறுமியின் கால்கள் மறைந்து போய், படுக்கையின் கீழ் மெதுவாக இழுக்கப்படுவது போல் தெரிகிறது. இந்த காட்சியை பார்த்த பிறகு சிறுமி ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டாள் என்று உறுதியாக நம்புகின்றனர். இந்த வீடியோவை சிறுமியின் தந்தை என் மகள் படுக்கைக்கு அடியில் இழுக்கப்படுகிறது. ஊர்ந்து சென்றதாக மனைவி நினைக்கிறார். ஆனால் அவள் ஏதோ ஒன்றால் இழுக்கப்பட்டாள்என்று அவரது தந்தை குறிப்பிட்டார். இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த காட்சியை பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது யூடியூபிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |