அண்ணாத்த பார்த்துவிட்டு பேரன் வேத் குஷீயானதாக ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்..
அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படம் பாத்துவிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, hoote ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு வணக்கம். நான் ரஜினிகாந்த் பேசுகிறேன். அண்ணாத்தை டிஸர் ரிலீஸ் ஆனதில் இருந்து என்னுடைய மூன்றாவது பேரன் வேத். அவனுக்கு ஆறு வயசு தான்ஆகிறது . படத்தை எப்போ காமிப்பிங்க தாத்தா எப்போம் காமிப்பாங்க எப்போம் பார்க்கலாம். ஒரு நாளைக்கு அட் லீஸ்ட் 15-20முறையாவது கேட்டுக்கொண்டே இருப்பான், கேட்டுக்கிட்டே இருப்பான்.. நான் இன்னும் ரெடியாகவில்லை என்றால் ஏன் ரெடியாகல எப்போம் பார்க்கலாம். இதற்காகவே நான் டைரக்டர் சிவா கிட்ட கேட்டேன் படத்தை சீக்கிரம் காமிங்க பேரன் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.
தாங்க முடியலன்னு சொல்லி அதுக்கப்புறம் சார் நீங்க டெல்லிக்கு போய்ட்டு வந்தவுடனே காட்டுரெண்ணு சொன்னாங்க. டெல்லிக்கு போயிட்டு வந்த உடனே படம் ரெடியா இருந்தது. 27 ஆம் தேதி 6 மணிக்கு சன் நெட்வொர்க் அலுவலகத்தில் திரையிடுவதாக சொல்லிருந்தார்கள். இது வந்து என்னுடைய இன்னொரு 2 பேரன் யாத்ரா, லிங்கா, கொடைக்கானலில் அவங்க அப்பா கூட சூட்டிங்ல இருக்காங்க, அவங்களை விட்டுட்டு நம்ம பட பாக்கணும்ன்னு சொன்னா அவ்வளவுதான் ரகளை ஆயிரும். சோ அவங்களுக்கு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன். சோ நானு, ஐஸ்வர்யா, செளந்தர்யா, என் மிசஸ் என் மாப்பிள்ளை விசாகன் , என் சம்பந்தி, எல்லாரும் சேர்ந்து படத்தை பார்த்தோம்.
வேத்வந்து என் பக்கத்துல உக்காந்து படம் பாக்கணும்னு சொல்லி என் பக்கத்திலேயே உட்கார்ந்து ஃபுல் படத்தையும் பார்த்தான். அவன் வாழ்க்கையில் மறக்கவே மாட்டான். ஃபுல் படத்தையும் அவளோ இன்ட்ரஸ்ட்டா பார்த்தான். படம் முடிஞ்சதும் என்னை கட்டிப்பிடிச்சு மூணு நாலு நிமிஷம் விடவே இல்லை. அவ்ளோ சந்தோசம் ரொம்ப சந்தோசம் ஆச்சு தாத்து தாத்துன்னு சொன்னான் சோ ஹேப்பி தேங்க்யூ தேங்க்யூ வெரிமச்னு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது.
தியேட்டரை விட்டு வெளியே வரேன் ஷாக்கிங் கலாநிதி மாறன் வெளியே நிற்கிறார். என்ன சார் இங்கே நிக்கறீங்கனு கேட்டேன் அதுக்கு அவரு உங்கள பாக்கணும் வந்தேன். அவ்வளவு பெரிய மனுஷன் அவ்வளவு பிஸி வரணும்னு அவசியம் இல்லை எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. எப்போதும் மேன்மக்கள் மேன்மக்களே நன்றி என்று கூறினார் .