Categories
தேசிய செய்திகள்

கட்டின மனைவியை… “பணத்துக்கு ஆசைப்பட்டு தாரைவார்த்த கணவன்”… புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தனது மனைவியை திட்டம்போட்டு வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்து அவரிடம் இருந்த நகை பணத்தை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் சேர்ந்த சோனு மற்றும் கோமல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை இருந்துள்ளது. இதற்கு என்ன வழி என இருவரும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தரகர் சுமன் என்பவரை அணுகி, மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அது என்னவென்றால் அதே பகுதியை சேர்ந்த ரவி என்ற நபருக்கு கோமலை திருமணம் செய்து வைத்து, அவரிடம் இருந்து நகை பணத்தை திருடி வருவதுதான். அதேபோல் ரவி வீட்டிற்கு சென்று கோமலை திருமணமாகாதவர்கள் எனக் கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து தனது மனைவியை காணவில்லை என்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் ரவி புகார் அளித்துள்ளார். மேலும் தனது மனைவிக்கு அன்பளிப்பாக வழங்கிய நகை பணத்தையும் காணவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தரகர் சுமன், சோனு மற்றும் கோமல் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்ட காவல்துறையினர் ரவியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |